வெளிமாநில நிர்வாகிகளை மாநாட்டிற்கு இறக்கும் விஜய்..!! மாஸ் பிளான்..!! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரசியல் நகர்வுகளுக்கான அடுத்தக் கட்ட பணிகளை சத்தமில்லாமல் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக த.வெ.க.-வினர் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மாநில மாநாடு, மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள், நடைபயணங்களை விஜய் திட்டமிட்டிருக்கிறார். மாநாட்டை பொறுத்தவரை மதுரையா? திருச்சியா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் முதல் அரசியல் பொதுக்கூட்டங்களை மதுரையில் நடத்துகின்றன. இது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 'தி கோட்' திரைப்படம் ரிலீசுக்கு பிறகே இந்த மாநாடு நடத்தப்படும். எனவே, தவெக மாநாடு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடத்தப்படலாம் என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் மண்டல மாநாடு, மாவட்ட பொது கூட்டங்களிலும் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுவார் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : உங்களுக்கு அதிக கடன் சுமையா..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!! பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்..!!