முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொண்டர்களுக்கு தளபதி 'VIJAY' போட்ட உத்தரவு.! நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.!

02:23 PM Feb 18, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்(Vijay). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சி பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டியிருந்தார். இந்தப் பெயர் தொடர்பான சர்ச்சை சமீப காலமாக நிலவி வந்த நிலையில் தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement

நடிகர் விஜய்யின் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கட்சி தொடர்பான கூட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெற்றி கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். தளபதி விஜய் புதிதாக நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் பெயர் மாற்ற அறிவிப்போடு கழக நிர்வாகிகளுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் விஜய்.

இது தொடர்பான அறிவிப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் என தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர்களின் சேர்க்கை உட்கட்சி கட்டமைப்பு போன்றவை தொடர்பான ஆலோசனைகளும் விவாதங்களும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெயர் மாற்றத்திற்கு பிறகு நடைபெற இருக்கும் முதல் கூட்டம் இதுவாகும். மேலும் இந்த கூட்டத்தில் கட்சி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பெயர் மாற்றத்திற்கு பிறகு நடைபெற இருக்கும் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள தளபதியின் கழகத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary: Tamil actor thalapathy vijay's political party will conduct its district executives from on tomorrow. Vijay adviced every one to attend the meeting

Tags :
executive members meetingpolitical partytvkvijay
Advertisement
Next Article