For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய் பேசும் திராவிட சித்தாந்தம்... 2026 தேர்தல் புதிய சரித்திர களமாக இருக்கும்...! அண்ணாமலை கருத்து...!

Vijay also speaks of the ideology of Dravidian parties annamalai comments
06:55 AM Dec 02, 2024 IST | Vignesh
விஜய் பேசும் திராவிட சித்தாந்தம்    2026 தேர்தல் புதிய சரித்திர களமாக இருக்கும்      அண்ணாமலை கருத்து
Advertisement

திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய்யை வரவேற்கிறோம். அவர் முழுநேர அரசியலுக்கு வந்து, அவரது கருத்துகளை முன்வைக்கும்போது, பாஜகவும் தனது கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தைதான் விஜய்யும் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது.

Advertisement

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பாஜக எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு. அரசியல் களம் என்பது வேறு. அக்.28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார். அவரை கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். இன்றைய சூழலில் திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்றாக பிரிந்திருக்கிறது. பாஜகவின் வாக்கு அதிகரித்து வருகிறது.

திமுக எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டை தான் பாஜக தொடர்ந்து வைத்து வருகிறது. உதயநிதி துணை முதல்வரானதன் மூலம் அது நிரூபணமாகி உள்ளது. வரும் காலத்தில் அவரது செயல்பாடுகளை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால், நிச்சயமாக பாராட்டுவோம்.தமிழகத்தில் பாஜகவில் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவிலேயே திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்தான் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது.

சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். பாஜகவின் பாதையும், சீமானின் பாதையும் வேறுவேறு. பாமக, அமமுக எங்களுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு 2026 தேர்தல் புதிய சரித்திர களமாக இருக்கும் என கூறினார்.

Tags :
Advertisement