For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Alert: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி...! கோவையில் தீவிர சோதனை...!

01:04 PM Apr 20, 2024 IST | Vignesh
alert  கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி     கோவையில் தீவிர சோதனை
Advertisement

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக கோவை எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் பகுத்து இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ என்பது பறவை இனங்களை தாக்கும்‌ ஒரு வைரல்‌ தொற்றுநோய்‌. இந்த நோய்‌ ஆங்கிலத்தில்‌ A Vian influenza மற்றும்‌ Bird Flu என அழைக்கப்படுகிறது. இந்நோய்‌ கோழி, வாத்து, வாண்கோழி, நீர்ப்பறவைகள்‌ மற்றும்‌ வணப்பறவைகள்‌ ஆகியவற்றை முக்கியமாகத்‌ தாக்கும்‌. பறவைக்காய்ச்சல்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ பல வகைகள்‌இருந்தாலும்‌ H5N1 என்ற வகை வைரஸ்‌ கிருமி அதிக வீரியம்‌ வாய்ந்தது. நோய்‌ பாதித்த பண்ணைகளில்‌ இறந்த கோழிகள்‌, கோழிக்கழிவுகள்‌, பண்ணை உபகரணங்கள்‌ மற்றும்‌ கோழித்தீவனம்‌ மூலமாக இந்நோய்‌ பரவுகிறது.

இந்நோய்க்கு சிகிச்சை எதுவும்‌ இல்லை.நோய்‌ வராமல்‌ தடுக்க நோய்‌ தடுப்பு முறைகளையும்‌, உயிர்‌ பாதுகாப்பு முறைகளையும்‌ பின்பற்ற வேண்டும்‌. கால்நடை பாரமரிப்புத்துறை மூலம்‌ கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கோழி பண்ணைகள்‌, பறவைகள்‌ சரணாலயம்‌ மற்றும்‌ புறக்கடைக்‌ கோழிகளை நேரில்‌ பார்வையிட்டு மாதிரிகள்‌ சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை-கேரளா எல்லையில் தீவிர சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement