முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆள விடுங்கடா சாமி.... எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்...

vignesh-shivan-deactivates-his-x-account
08:23 PM Dec 02, 2024 IST | Saranya
Advertisement

போடா போடி மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் விக்னேஷ் சிவன். இவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதை தாண்டி, இவர் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உள்ளார். மேலும், சில படங்களில் இருந்துள்ளார். அதோடு சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றியுள்ளார். நயன்தாராவின் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி லீட் கேரக்டர்களில் நடித்துவரும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கியுள்ளார். இதை செவன் ஸ்கிரீன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் கோடை கொண்டாட்டமாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

Advertisement

இந்நிலையில், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது எக்ஸ் தளப் பக்கத்தைச் செயலிழக்க வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக கிளம்பிய சர்ச்சையால் விக்னேஷ் சிவனை பலர் விமர்சித்தனர். இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் நடத்திய பான் இந்தியா இயக்குநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டதால், விக்னேஷ் சிவன் அப்படி என்ன இயக்கி விட்டார் என பலர் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால் கோபமடைந்த அவர், எக்ஸ் தளத்தை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி விக்னேஷ் சிவன், அதிகாரப் பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

Read more: அடிக்கடி நீங்க சோர்வா இருக்க காரணம் என்ன தெரியுமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்…

Tags :
deactivatedhanushVignesh shivanx account
Advertisement
Next Article