வீடியோ: விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் 'TEJAS' போர் விமானத்தின் பைலட் பாதுகாப்பாக வெளியேறும் காட்சி.!
ராஜஸ்தானில் விபத்திற்கு உள்ளான TEJAS போர் விமானத்திலிருந்து பைலட்(PILOT) பாதுகாப்பாக வெளியேறும் வீடியோ வைரலாகி இருக்கிறது.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இன்று விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார், ஆனால் விமானம் கீழே விழுந்ததின் தாக்கத்தில் தீப்பற்றி எரிந்தது . இந்த விமான விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. விமானம் விபத்திற்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஜெட் விமானத்தின் பைலட் எஜெக்ஷன் இருக்கையை இயக்கி, பாராசூட்டை பயன்படுத்தி பாதுகாப்பாக தரையிறங்கும் வீடியோ கிளிப் வெளியாகி இருக்கிறது .
இன்று விபத்திற்குள்ளான தேஜாஸ்(TEJAS) விமானத்தில் 0-0 எஜெக்ஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மார்ட்டின் பேக்கர் என்பவர் ஆள் தயாரிக்கப்பட்டது. இந்த வசதி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் வேகத்திலும் கூட விமானி(PILOT) பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவி புரிகிறது . இன்றைய விபத்தில் கூட விமானி பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது.
தேஜாஸ் போர் விமானம் ஒற்றை இருக்கையை கொண்ட ஃபைட்டர் ஜட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் தொழில்நுட்பத்தில் இந்த வகை விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.4.5- ஜன்னதேசம் மல்டி-ரோல் ஃபைட்டராக இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கும் நெருக்கமான போர் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய விபத்து பின்னடைவாக இருந்த போதிலும் இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் தேஜாஸ் திட்டம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.