”ஒட்டுத் துணி இல்லாம வீடியோ கால் வரணும்”..!! நண்பனை நம்பிய இளம்பெண்..!! கடைசியில் வைத்த ஆப்பு..!!
நண்பனை நம்பி ஒரு பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்றிருக்கிறாள். அவனும், நிர்வாணமாக வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததை ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளான்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தான் மும்பையில் எம்எஸ்சி வேதியியல் படித்து வருவதாகவும், விடுமுறை நாட்களில் வளசரவாக்கில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த சுஜித் என்ற வாலிபர் தனக்கு அறிமுகமானார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக தோன்றும்படி அடிக்கடி கேட்டுக் கொண்டார். அதற்கு தான் மறுத்ததால், கத்தியால் தனது கையை வெட்டி கொள்வதாக சுஜித் கூறியதால், இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் சுஜித்துடன் பேசினேன்.
அதன் பிறகு அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு சுஜித் தன்னை மிரட்டி அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டி வருகிறார். சுஜித், தன்னை மிரட்டி ரூ.5 லட்சம் வரை பெற்றுள்ள நிலையில், மீண்டும் 50,000 ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன்” என்று தொடர்ந்து அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.