’ரொம்ப அவசரம் சார்’..!! கால்பந்து போட்டியின்போது சிறுநீர் கழித்த வீரர்..!! அதிரடியாக வெளியேற்றிய நடுவர்..!!
கால்பந்து போட்டியின் போது சிறுநீர் கழித்த வீரரை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கால்பந்து கருதப்படுகிறது. ஆட்டத்தின் போது விதிகளை மீறியோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அந்த வீரர் எச்சரிக்கப்பட்டு, பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்நிலையில் தான், கால்பந்து போட்டியில் ஆட்டத்தின் நடுவே சிறுநீர் கழித்த வீரரை ரெட் கார்டு காட்டி போட்டியில் இருந்து நடுவர் வெளியேற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கால்பந்து போட்டியில் atletico awajun அணியும், Canttorcillo FC அணியும் மோதின. போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் atletico awajun அணி வீரர் செபாஸ்டியன் முனோஸ் என்பவர் திடீரென எல்லைக் கோட்டை தாண்டி சென்றார். இதையடுத்து, சில நொடிகளில் அனைவரது முன்னிலையிலும் அவர் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். எதிர்பாராத அவரின் இந்த செயலை, எதிர் அணி வீரர்கள் நடுவரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நடுவர், அந்த வீரரை அழைத்து எச்சரித்தார். பின்பு, சிவப்பு அட்டையை எடுத்துக் காட்டி உடனடியாக ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். என்ன நடக்குது என்று புரியாமல் செபாஸ்டியன் முனோஸ் ஒரு கணம் தடுமாறியபடி வெளியேற, இந்த காட்சியை ரசிகர் ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதை பலரும் கடுமையாக விமர்சிக்க இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Read More : கிருஷ்ணகிரியில் மேலும் 13 மாணவிகள் பாலியல் பலாத்காரம்..? தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!!