சென்னைக்கு மிக கனமழை அலர்ட்..!! தமிழ்நாடு முழுவதுமே தரமான சம்பவம் இருக்கு..!! தேதி குறித்த வானிலை மையம்..!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வரும் 15ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், தேனி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை... மிக கனமழை...
தமிழ்நாட்டில் நாளை திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரியில் கனமழையும், வரும் 13ஆம் தேதி திண்டுக்கல், திருப்பூர், கரூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிசச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு மிக கனமழை அலர்ட்...
வரும் 15ஆம் தேதி திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும். வரும் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read More : பிக்பாஸ் வீட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி..? நீயெல்லாம் இதை பேசலாமா..? காரி துப்பும் முன்னாள் மனைவி..?