தலைவலி மற்றும் காய்ச்சல் இருக்கா..! அச்சுறுத்தும் "மார்பர்க் வைரஸ்"..! WHO பரபரப்பு எச்சரிக்கை..!!
மிகவும் ஆபத்தான, குணப்படுத்த முடியாத நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு 26 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பாதிப்புக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, பரவும் அந்த தொற்றானது Marburg Virus என்றே அடையாளப்படுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 30ல் ஏழு மாவட்டங்களில் நோய்த்தொற்றைக் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் நோய் பாதிப்பை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் சுகாதாரப்பணியாளர்கள். நோயாளிகள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். WHO மற்றும் அதன் இதர அமைப்புகளின் ஆதரவுடன் ருவாண்டா அரசாங்கம் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த பாதிப்புக்கு தற்போது முறையான சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. அறிகுறிகள் தென்பட்டால் உடனையே மருத்துவர்களை நாட வேண்டும். தொடக்கத்திலேயே அளிக்கப்படும் சிகிச்சையானது பலனளிக்கும்.
மார்பர்க் வைரஸால் ஏற்படும் பாதிப்பு, அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை மூன்றாவது நாளில் தொடங்கும். அறிகுறிகள் தொடங்கியதில் இருந்து ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் கடுமையான ரத்தக்கசிவு தோன்றலாம். ஆனால், அனைவருக்கும் இது காணப்படுவதில்லை.
அறிகுறி தோன்றிய எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குள் மரணம் பெரும்பாலும் நிகழ்கிறது. அதிகமான ரத்தப்போக்கு காரணமாகவே மரணம் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.20,000 வரை பணம்..!! தமிழ்நாடு அரசு அட்டகாசமான அறிவிப்பு..!!