For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேங்கைவயல் விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு... சிபிசிஐடி கோரிக்கை என்ன?

07:13 PM Mar 25, 2024 IST | Baskar
வேங்கைவயல் விவகாரம்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு    சிபிசிஐடி கோரிக்கை என்ன
Advertisement

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

சம்பவம் நடந்தபோது வாட்ஸ் ஆப் தளங்களில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க போலீஸ் திட்டம் தீட்டி வருவதை அறிந்த வேங்கைவயல் மக்கள், விசாரணையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மேலும், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 11 பேரின் மாதிரிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.  டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்த 11 பேரில் எட்டு பேர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு சம்மன்  அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 2 பெண்கள் உள்பட மூவருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement