வண்டியின் நம்பரை வைத்து இதெல்லாம் பண்ணலாமா..? வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
ஒரு வண்டியின் எண்ணை வைத்து அந்த வண்டியின் தகவல்களை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் பழைய வாகனம் ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், அந்த வாகனம் குறித்தும் அதன் ஓனர் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அதற்கு முன்பெல்லாம் ஆர்டிஓ ஆபீஸ் சென்று கேட்க வேண்டும். ஆனால், இப்போது நம்பர் பிளேட் இருந்தாலே போதும் ஈஸியாக தெரிந்து கொள்ளலாம். இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே வாகனத்தின் உரிமையாளர் விவரங்களை நம்பர் பிளேட் மூலம் சரி பார்க்கலாம்ம்.
வாகனம் : சாலையில் விபத்து ஏற்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளரின் சரியான விவரங்களை வைத்திருப்பது அவசியம். அப்படி அது இருந்தால் தான் நீங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியும். எனவே, இதுபோன்ற நேரங்களில் விபத்தை ஏற்படுத்திய வாகனங்களின் நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதாக உரிமையாளர் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி பார்க்கலாம்..? நம்பர் பிளேட் மட்டும் இருந்தால் போதும் பரிவஹன் (Parivahan) இணையதளத்தில் வாகன உரிமையாளர் தரவுகளைப் பார்க்கலாம்.
* முதலில் பரிவாஹனின் (Parivahan) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* அடுத்து அங்கு informational services என்பதைக் கிளிக் செய்து, கீழே வரும் மெனுவில் இருந்து Know Your Vehicle Details என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* நீங்கள் ஏற்கனவே யூசராக இருந்தால், உங்கள் தரவுகளைப் பதிவிட்டு லாகின் செய்யவும். புதிய யூசர் என்றால் புதிய கணக்கை உருவாக்கவும்.
* அடுத்த பக்கத்தில் வாகனப் பதிவு எண் மற்றும் கேப்ட்சாவை பதிவிட்டு 'VAHAN தேடல்' என்பதைக் கிளிக் செய்யவும்.
* அடுத்த பக்கத்தில் உங்களுக்கு அந்த குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கிடைக்கும். அதில் உரிமையாளர் பெயர் எப்போது வாகனம் வாங்கப்பட்டது. எப்போது ரெஜிஸ்டர் செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் இருக்கிறதா. இருந்தால் எவ்வளவு காலம் அது செல்லுபடியாகும் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
Read More : ”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!