விசிக நிர்வாக மறுசீரமைப்பு.. விண்ணப்பம் செய்வதற்கான வறைமுறைகள் வெளியிட்ட திருமா..!!
தமிழக அரசியலில் முக்கிய அரசியல் கட்சியாக திகழ்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி வியூகத்தை தொடர்ந்து கையிலெடுத்து வரும் திருமாவளவன், தங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் வலுவாக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எனவே ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற கணக்கில் காய் நகர்த்துகின்றனர். ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இன்னும் 90 பேரை நியமிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்ட குழு கடந்த சில நாட்களாக தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை வரும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை எனச் சொல்லப்படுகிறது.
அதன்படி, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், 4 மாவட்ட துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் நிலப்பரப்பின் அடிப்படையில் 2 மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒரு பெண் மாவட்ட துணைச் செயலாளர், தலித் அல்லாத ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்படுவர். ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதி மாவட்டத்திற்கு ஒருவர் நியமனம் செய்யப்படுவார். இவை இல்லாமல் 2 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறோம். ஏற்கனவே நியமிக்கப்பட்ட 144 மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்படுவர்.
விண்ணப்பம் செய்வதற்கான வறைமுறைகள் இதோ :
* ஒரு சட்ட மன்றத்தின் எல்லையே மாவட்ட நிர்வாகத்தின் எல்லையாகும். எனவே அந்த எல்லைக்குட்பட்டவர்கள் மட்டும் மாவட்ட நிர்வாக பொறுப்பு விண்ணப்பிக்க வேண்டும்.
* ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. ஏற்கனவே விண்ணப்பித்தும் தமிழ்மண் இதழுக்கு சந்தா செலுத்த வில்லை எனில், அதனை உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
* மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி மாநில பொறுப்புகளுக்கும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். கட்ச்சிக்கு மட்டுமின்றி துணை நிலை அமைப்புகளுகான பொறுப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்மண் இதழுக்கான வாழ் நாள் சந்தா ரூ.2000 செலுத்த வேண்டும். அதனுடன் பொறுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
* விண்ணப்பிக்க 20.11.2024 கடைசி நாளாகும்.