மறந்தும் கூட ‘இந்த’ நேரத்தில் யாருக்கும் பணம் கொடுக்காதீங்க! வீட்டில் வறுமை ஏற்படுமாம்..
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வீட்டில் எந்தெந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது தொடங்கி, வீட்டில் எந்த பொருட்களை வைக்க வேண்டும், எவற்றை வைக்கக் கூடாது என்பது வரை பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கவும், செல்வ செழிப்புடன் இருக்கவும் பல குறிப்புகள் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றுவது உங்கள் வீடு மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் வீட்டில், நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் மற்றும் நேரங்களும் உள்ளன. இதனைப் பின்பற்றுவது நிதி சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான இந்த வாஸ்து விதிகள் பின்பற்றப்படாவிட்டால், வீட்டில் வறுமை தங்கக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பரிவர்த்தனைக்கு சரியான நேரத்தைக் தெரிந்துகொள்வது முக்கியம். சரி, எப்போது பணம் கொடுக்க வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும்?
மாலை நேரம்: மாலை நேரத்தில் பொதுவாக எந்த நிதிப் பரிவர்த்தனைகளையும் செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பணப் பரிவர்த்தனைகள் செய்வது நல்லதல்ல. எனவே மாலை நேரத்தில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.
அதே போல் சூரிய உதயத்திற்குப் பிறகு உடனடியாக பணப் பரிவர்த்தனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நிதி நடவடிக்கைகளுக்கு சாதகமற்றதாகக் கருதப்படுகிறது. சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம், பாரம்பரியமாக ஆன்மீகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே சூரிய உதயமான உடனே பண பரிவர்த்தனை செய்வது நல்லதல்ல. வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இந்த அசுபமான நேரங்களில் பணப் பரிவர்த்தனை செய்வது பல்வேறு நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இந்தக் காலகட்டங்களில் பணப் பரிவர்த்தனை செய்வது செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவியை அதிருப்திப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
சூரியன் உதயமாகி சில மணி நேரம் கழித்து பகல் பொழுதில் நிதிப் பரிவர்த்தனைகளை செய்வதற்கு சுப நேரமாகக் கருதப்படுகிறது.சூரிய உதயத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பணம் தொடர்பான செயல்பாடுகளுக்கு சரியான நேரம் என்று கருதப்படுகிறது. சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு ஒருபோது பணப் பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
Read More : பரிகார பூஜை செய்ய கோயிலுக்கு போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!