தமிழக பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு!… இன்றுமுதல் 16ம் தேதிவரை சம்பவம் செய்யும் கனமழை!
Heavy Rain: காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் 16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17, 18-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நாளை மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் மதுரையிலும், 15-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 16-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Readmore: பூமியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு!… சுனாமி எச்சரிக்கையா?