For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காற்று வீசுவதில் மாறுபாடு..!! தமிழ்நாட்டிற்கு கைகொடுக்காத மழை..!! என்ன காரணம்..?

The absence of convective rains in July and August this year is due to the variation in wind patterns.
07:06 AM Aug 23, 2024 IST | Chella
காற்று வீசுவதில் மாறுபாடு     தமிழ்நாட்டிற்கு கைகொடுக்காத மழை     என்ன காரணம்
Advertisement

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் வெப்பச்சலன மழை இந்த வருடம் பெய்யாததற்கு, காற்று வீசுவதில் நிலவும் மாறுபாடே காரணம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

தென்மேற்கு பருவமழை என்பது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதான ஆதாரமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழையே பிரதானம். இருப்பினும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யும். மற்ற உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலன மழை தான் பேருதவியாக இருக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் நடப்பாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்பச்சலன மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் பெய்து வரும் மழையே, தமிழகத்துக்கு கைகொடுத்து வருகிறது. இதுபற்றி, தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறும்போது, ”தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேக கூட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. நிலத்தில் இருந்து வெப்பம், இந்த கருமேக கூட்டங்களை நோக்கி சென்று, அதை குளிர்விக்க வேண்டும்.

அப்போது தான் வெப்பச்சலன மழை பெய்யும். ஆனால், காற்று வீசுவதில் மாறுபாடு காரணமாக, வெப்பக்காற்று மேக கூட்டங்களுக்கு செல்லாததால், நல்ல கருமேக கூட்டம் இருந்தும், மழை பெய்யவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 28ஆம் தேதி வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Read More : வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!! கண் திருஷ்டி காணாமல் போகும்..!!

Tags :
Advertisement