வேண்டுதலை நிறைவேற்றும் வாராஹி அம்மன்..!! எப்படி வழிபட வேண்டும்..? மார்கழி 26ஆம் தேதியை மறந்துறாதீங்க..!!
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்வோம். நாம் வழிபாட்டை செய்தும் அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால், சில சூட்சமமான வழிமுறைகளை பின்பற்றுவோம். அந்த வழிமுறைகளில் ஒன்றாக திகழ்வதுதான் இந்த ஒரு வழிமுறை. இதில் நாம் வாராஹி அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்போது, எந்த பொருளை கையில் வைத்துக் கொண்டு வேண்டுதல் வைக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மார்கழி மாதம் 26ஆம் தேதி ஏகாதேசி வருகிறது. அன்றைய தினம் சுவாதி நட்சத்திரமும் வருவதால், அன்றைய தினம் பெருமாளுக்கு மிகவும் உகந்த தினம். பெருமாளின் அம்சத்தை கொண்டவராக திகழக் கூடியவர் தான் வாராகி அம்மன். அன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் நிறைவேறும்.
இதற்கு நாம் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு துளசி இலைகள் வேண்டும். துளசி இலையை கையில் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் நமோ வாராகி தேவியே நமோ நமக” என்னும் மந்திரத்தை 111 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக 2 நெய் தீபம் ஏற்றி வைத்து பனங்கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து துளசி இலைகளை வைத்துக்கொண்டு உங்களுடைய வேண்டுதலை வாராகி கூறினால், அது விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். அதே போல், வாராஹி அம்மன் படத்திற்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்வதும் நல்ல பலனைத் தரும். வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஏகாதேசி திதியில் வாராஹி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.