முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வைகோ மருத்துவமனையில் அனுமதி..! துரை வைகோ சொன்ன அந்த தகவல்..

04:27 PM May 26, 2024 IST | Mari Thangam
Advertisement

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் வைகோ. திமுகவில் பல ஆண்டுகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமாக பயணித்து மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதன்பிறகு 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கி தற்போது வரை அதன் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வைகோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மதிமுகவுக்கு புத்துயிரூட்டும் வகையில் துரை வைகோ கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது மதிமுக தலைமைக் கழக செயலாளராக இருக்கும் துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ளார். முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டுமே வைகோ இப்போது பங்கெடுத்து வரும் நிலையில், பெரும்பாலான நிகழ்வுகளில் அவருக்கு பதிலாக துரை வைகோவே கலந்துகொள்கிறார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து வைகோவின் மகன் துரை, எக்ஸ் சமூகவலைதளத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (மே-25) திருநெல்வேலி சென்று இருந்தார்.

இரவு, வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதனால் அவர் சென்னைக்கு செல்ல உள்ளார். தந்தை விரைவில் நலம் பெறுவார். அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம்…!

Tags :
Durai Vaikohealth issuehospitalmdmkParliment electionTamilnaduvaiko
Advertisement
Next Article