For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாவ்...! இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி...!

06:40 AM Feb 15, 2024 IST | 1newsnationuser2
வாவ்     இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி
Advertisement

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிவளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளையும் அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.

Advertisement

கோழிவளர்ப்பு ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானியமிகுதிகளிலும் நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக்கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாண்டு பிப்ரவரி முதல் மற்றும் இரண்டாம் வாரம் வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. ஆகவே மேற்கண்ட முகாம்களில் தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தினை செலுத்தி பயனடையலாம்.

Tags :
Advertisement