முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம்”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Director of Health Department Selva Vinayak said that steps will be taken to provide free vaccination for children in certain private hospitals and this program will soon come into effect.
01:45 PM Jul 29, 2024 IST | Chella
Advertisement

குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

இதற்காக பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் அதன் அடிப்படையில் சில மையங்கள் திறக்கப்படும். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். இது முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை போல பயன்பெற முடியும். அதேசமயம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டம் இல்லை. ஏனென்றால், நாம் தடுப்பூசி அளித்தால் அதை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்கும் வகையில் வசதிகள் இருப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
தடுப்பூசி இலவசம்தனியார் மருத்துவமனை
Advertisement
Next Article