For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விருதுநகர் மக்களே!! கை நிறைய சம்பளத்துடன் குழந்தைகள் நலத்துறையில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க...

Vacancy has been announced in Child Welfare Department in Virudhunagar district
10:53 AM Jun 24, 2024 IST | Mari Thangam
விருதுநகர் மக்களே   கை நிறைய சம்பளத்துடன் குழந்தைகள் நலத்துறையில் வேலை   மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில், தகவல் பகுப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,536 வழங்கப்படும். விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இணைத்து அதை‌ கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் ஜுன் 28 - 2024 மாலை 5.30 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement

என்னென்ன தகுதிகள் ;

  • இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல்(பிசிஏ) போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி சார்ந்த பணிகளில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • 42 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விரும்புவோர் www.virudhunagar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள், சமீபத்திய புகைப்படத்துடன் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர்-626 003. தொலைபேசி எண்.04562-293946 என்ற அஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

Read more ; Sonakshi Sinha | 7 வருட காதல்.. ஜாகீர் இக்பாலை கரம் பிடித்தார் லிங்கா பட நடிகை!!

Tags :
Advertisement