டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த குரூப் 4 தேர்வை எழுதுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 பிரிவில் 6244 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வு மூலம் விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டானது வெளியிடப்பட்டுள்ளது. இது
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் உரிய தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்பட பல்வேறு நிலைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற உள்ள தேர்வுகள் குறித்து முந்தைய ஆண்டே கால அட்டவணை வெளியிட்டு அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. குரூப் 4 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியே போதுமானது என்றாலும் பட்டப்படிப்பு, முதுகலைபட்டம் பயின்றவர்கள் கூட இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள். அரசுவேலைக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற கனவுடன் படித்து வரும் லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கு அதிகம் தயராகி வருகிறார்கள். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட லக்கணக்கான போட்டி தேர்வர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு ஆணைய வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதனால், திருவிழா போல குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதனால், தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்களையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.