For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..? சம்பளம் எவ்வளவு..?

TCS Chennai has published a notification to fill the vacant posts.
07:17 AM Oct 21, 2024 IST | Chella
சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்     விண்ணப்பிக்க ரெடியா    சம்பளம் எவ்வளவு
Advertisement

சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று TCS எனும் Tata Consultancy Services. இந்நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது React JS Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இப்பணிக்கு விண்ணப்பிப்போர் React JS, Typescript, JavaScript, HTML, CSS உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் Bootstrap அல்லது அதுபோன்ற பிரேம்வொர்க்ஸ் பயன்படுத்தி டெவலப்பிங் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் Module Bundler- Webpack தெரிந்திருக்க வேண்டும். கோட் வெர்சனிங் டூல்ஸ் git/bitbucket, யூனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க்ஸான Karma/JEST தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக React JS Developer பணியில் 4 முதல் 9 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி, இந்த பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் அறிவிக்கவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விவரம் தெரிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால், முடிந்தவரை கால தாமதம் செய்யாமல், முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது என்பதை கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகும். பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை பார்க்க https://www.linkedin.com/jobs/view/4054138635/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.

Read More : மொபைல் தயாரிக்கும் முன் நோக்கியா நிறுவனம் என்ன செய்தது?. ஆச்சரியமான தகவல்!.

Tags :
Advertisement