HCL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்..!! சென்னையில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!
முன்னணி ஐடி நிறுவனங்களான HCL, புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Walkin Interview Financial Crime Operations & QA in Fincrime என்ற பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு அனலிஸ்ட் & சீனியர் அனலிஸ்ட் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விவ்ரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள HCL அலுவலகத்தில் பணிபுரிவார்கள்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இதில், பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd. ETA 1- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு : https://www.linkedin.com/jobs/view/4095516429/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH&original_referer=https://m.dailyhunt.in/
Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..? விவரம் உள்ளே..!!