For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Chief Minister M.K. Stalin has announced that U.V. Swaminathan's birthday will be celebrated on February 19th as Tamil Literary Renaissance Day.
11:21 AM Dec 10, 2024 IST | Chella
”உ வே சாமிநாதர் பிறந்தநாள்     சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement

உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் பிப்.19ஆம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டசபையின் 2ஆம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, உ.வே.சாமிநாதன் பிறந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். திருவாரூரில் பிறந்த உ.வே. சாமிநாதன் தான் வைணவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தால் தமிழை கற்க விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில், வெங்கட்ராமன் என்ற தனது இயற்பெயரை சாமிநாதன் என்று மாற்றிக்கொண்டு தமிழை கற்றவர்.

தனக்கு தமிழ் தான் முக்கியம் என்று அன்றே சொன்னவர் சுவாமிநாதன். அவரது பெயரை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உ.வே. சாமிநாதன் பற்றிய முழு கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு மாற்றுக் கருத்துகள் இல்லை எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அவர் சொன்ன அத்தனை கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார். இந்நிலையில், உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read More : “இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை”..!! ”யாரும் பிரச்சாரத்துக்கு போகாதீங்க”..!! வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..!!

Tags :
Advertisement