For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு..!! பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு..!!

121 people have died in the stampede of the Uttar Pradesh spiritual event so far.
09:17 AM Jul 03, 2024 IST | Chella
உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு     பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் தான்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement