புற்று நோயை உண்டாக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள்..!! - நிபுணர்கள் எச்சரிக்கை
உலக அளவில் ’நான்ஸ்டிக்’ பாத்திரங்கள் இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனெனில் அவ்வகை பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைத்து முடிக்கலாம். குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது ஆரோக்கிய முறையில் அணுகினால் ஆபத்து ஏற்படும்.
பொதுவாக டெஃப்ளான் என அழைக்கப்படும் பாலி டெட்ரா ஃப்ளூரோ எத்திலீன் (PTFE) என்ற பொருளால் பூசப்பட்டிருக்கும் பாத்திரங்களே இந்த நான்ஸ்டிக். இதில், டெஃப்ளான் என்பது கார்பன் மற்றும் புளோரின் அணுக்களால் ஆன ஒரு செயற்கை இரசாயனமாகும். இது கிட்டத்தட்ட உராய்வு இல்லாத மேற்பரப்பை வழங்கக் கூடிய தன்மை கொண்டது. ஆனால், சில ஆதாரங்கள் அவை தீங்கு விளைவிப்பதாகவும் புற்றுநோய் போன்ற சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றன.
260 டிகிரி செல்ஸியஸ்க்கு அதிகமாக வெப்பநிலையில் நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்காமல் இருக்கும் வரை பாதுகாப்பானதே. ஏனெனில், இதற்கு மேல் இருக்கும் வெப்பநிலையில், டெஃப்ளான் பூச்சுகள் உடைந்து, நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடுகின்றன. இந்த புகைகளை உள்ளிழுக்கும்போது உடல்நலம் பாதிக்கப்படும். இந்த புகைகளை உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் ஏற்படலாம்.
குறைந்த முதல் நடுத்தர வெப்பத்தில் நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதும், கீறல் அல்லது சேதமடைந்த பாத்திரங்களைத் தவிர்ப்பதும் அபாயங்களைக் குறைக்கும். ஒரு கீறலில் இருந்து குறைந்தது 9,100 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியாகின்றன. எனவே இது போன்ற பாத்திரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Read more ; அக்கா – தங்கையை திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகர்..!! யாரும் பார்த்திராத புகைப்படம்..!!