’உஷாரய்யா உஷாரு’..!! பெற்றோர்களே இனி இந்த தவறை செய்தால் சிறைக்குத்தான் போகணும்..!!
18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் விபத்துகளை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பது விதி. ஆனால், 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல விபத்துகள் அதிகமாகிறது. இதனை பலமுறை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை கண்டித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை ஒரு விதியை அமல்படுத்தவுள்ளது. அதன்படி, 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேலும், 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அவரின் பெற்றோருக்கு 3 மாத சிறையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. இந்த விதி வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நீங்க அடிக்கடி இந்த மாதிரி ஆகுறீங்களா..? தினசரி இதை மட்டும் பண்ணுங்க..!! எல்லாம் பறந்துபோயிரும்..!!