முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல்!. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!. டொனால்ட் டிரம்ப் முன்னிலை!.

US presidential election! Counting of votes has started! Donald Trump leads in 3 states!
07:15 AM Nov 06, 2024 IST | Kokila
Advertisement

US Elections: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி ஓட்டு எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில் 3 மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

நவம்பர் மாத முதல் வார செவ்வாய்கிழமைதான் அங்கு 'தேர்தல் நாள்' ஆகும். அதன்பேரில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ. 5) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று காலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் (Donald Trump) தான் தேர்தல் வெற்றியில் முன்னணியில் இருப்பதாகவும் துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, இண்டியானா, கெண்டகி, வெஸ்ட் விர்ஜினியாவில் ஆகிய 3 மாகாணங்களில் இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி கமலா ஹாரிஸ் வெர்மான்ட் மாகாணத்தை கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஐபிஎல் மெகா ஏலம் 2025!. 1,574 வீரர்கள் பங்கேற்பு!. பிசிசிஐ வெளியிட்டுள்ள அப்டேட்!

Tags :
Counting of votes beginsDonald Trump taking leadUS Elections
Advertisement
Next Article