"உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும்" ரஷ்ய அதிபர் புதினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட ட்ரம்ப்..!!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உக்ரைனில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 70க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதில் முதன்மையானவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் அடங்குவர். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது, உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம். போரை கைவிட வேண்டும் என புதினை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற எதிபார்ப்பும் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிரம்ப்-புடின் அழைப்பு குறித்து உக்ரைனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள தனது ரிசார்ட்டிலிருந்து டிரம்ப் எடுத்த அழைப்பின் போது, உக்ரைனில் போரை அதிகரிக்க வேண்டாம் என்று ரஷ்ய அதிபருக்கு அவர் அறிவுறுத்தினார், மேலும் ஐரோப்பாவில் வாஷிங்டனின் கணிசமான இராணுவ பிரசன்னத்தை அவருக்கு நினைவூட்டினார், என்று அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கும் மற்ற உலகத் தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட அழைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று டிரம்ப் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் பிடிஐயிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஜனாதிபதி டிரம்ப் ஒரு வரலாற்றுத் தேர்தலில் தீர்க்கமான முறையில் வெற்றி பெற்றார், மேலும் உலக அரங்கில் அமெரிக்கா மீண்டும் முக்கியத்துவம் பெறுவதை உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அறிவார்கள். அதனால்தான் தலைவர்கள் 45 மற்றும் 47 வது ஜனாதிபதியுடன் வலுவான உறவுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர்" என்றார்.
Read more ; திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!! சார்ஜ் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! வாகன ஓட்டிகள் பீதி..!!