US Open 2024!. வரலாறு படைத்த ஜானிக் சின்னர்!. பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன் என்ற பெருமை!
2024 அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரரை வீழ்த்தி பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜானிக் சின்னர் படைத்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவருக்கான இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் தற்போதைய நம்பர் 1 டென்னிஸ் வீரரான இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் - அமெரிக்க டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் மோதினர். ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிர்ட்ஸ்-ஐ 6-3,6-4,7-5, என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார் சின்னர்.
அமெரிக்க ஓபனை வெல்லும் முதலாவது இத்தாலிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், இது அவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 2024 ஆம் ஆண்டிலேயே அவர் தனது இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று இருக்கிறார். முன்னதாக அவர் 2024 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஒரே சீசனில் ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை பெற்ற நான்காவது டென்னிஸ் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.