முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுமார் 4 பில்லியன் மதிப்பிலான ஆயுதமேந்திய ட்ரோன்கள்!… இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

07:53 AM Feb 02, 2024 IST | 1newsnationuser3
Advertisement

3.99 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 31 MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்தின் போது ட்ரோன் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து 31 MQ-9B ஸ்கை கார்டியன் ட்ரோன்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டிய நிலையில், அதற்கு பைடன் அரசும் ஒப்புதல் கொடுத்தது. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்தான மிக முக்கியமான ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது. இந்த விற்பனைக்கான ஒப்புதலைத் தான் இப்போது அமெரிக்க பாதுகாப்பு செக்யூரிட்டி ஒத்துழைப்பு அமைப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க பாதுகாப்பு செக்யூரிட்டி ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இதன் மூலம் அமெரிக்க-இந்திய உறவு வலுப்படும். இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை வலுப்படுத்தும். இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.

இந்த விற்பனை என்பது இந்தியாவின் ஆளில்லா கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேம்படுத்தும். இது தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவின் திறனை மேம்படுத்தும். இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த டிரோன்களை வாங்கி இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த டிரோன்களை வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இறுதியில் பிரதமர் மோடி கடந்தாண்டு அமெரிக்கா சென்ற போது இந்த 3.99 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் இந்த 31 டிரோன்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் பயன்படுத்தப்படும். அமெரிக்கா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொலை செய்ய இந்திய அதிகாரிகள் முயன்றதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதனால் இந்த டிரோன் ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் அமெரிக்கா இந்த டிரோன் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Tags :
armed dronesUS approves saleஅமெரிக்கா ஒப்புதல்ஆயுதமேந்திய ட்ரோன்கள்இந்தியாவிற்கு விற்பனை
Advertisement
Next Article