For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரி ராணுவ முகாம் தாக்குதல்: அரண்டு போன பாகிஸ்தான்.!ஐஎஸ்ஐ' தொடர்பை நிரூபித்த அமெரிக்கா.!

10:22 AM Jan 09, 2024 IST | 1newsnationuser7
யூரி ராணுவ முகாம் தாக்குதல்  அரண்டு போன பாகிஸ்தான்  ஐஎஸ்ஐ  தொடர்பை நிரூபித்த அமெரிக்கா
Advertisement

2016 ஆம் ஆண்டு இந்தியாவின் யூரி ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்கா கேள்வி எழுப்பியதாக இந்தியாவின் முன்னாள் தூதர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ்ஐ அமைப்பு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் அதன் அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் இந்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அழைத்த நவாஸ் ஷெரிப் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக அஜய் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ராணுவ அதிகாரிகளிடம் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதால் 2017 ஆம் ஆண்டு தனது ஆட்சியை இழந்து 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு நவாஸ் ஷெரிப் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படைத்தளமான பத்தான்கோட் தாக்குதலிலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஸ்-இ-முஹம்மத் தீவிரவாதிகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 2016 ஆம் வருடத்தில் யூரி ராணுவ தளத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர் இந்த தாக்குதலுக்கும் ஜெய்ஸ்-இ-முஹம்மத் தீவிரவாத அமைப்பு காரணம் என்றாலும் இதற்குப் பின்னணியில் ஐஎஸ்ஐ உணவு அமைப்பு இருந்ததை அமெரிக்கா ஆதாரங்களுடன் பாகிஸ்தானிடம் நிரூபித்ததாக அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவு மலர இருந்த நேரத்தில் இந்த தாக்குதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உறவில் மிகப்பெரிய வெடி சிலை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரை ஆதாரங்களுடன் எதிர்கொண்ட அமெரிக்க தூதர் யாரென்று அஜய் வெளியிடவில்லை. மேலும் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர் டேவிட் ஹேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement