For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Modi: தேர்தல் அவசரம்!... மார்ச் 15ல் பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு கூட்டம்!…

06:13 AM Mar 11, 2024 IST | 1newsnationuser3
modi  தேர்தல் அவசரம்     மார்ச் 15ல் பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு கூட்டம் …
Advertisement

Modi: புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும், அருண் கோயலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்தது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும். இக்கூட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இறுதி செய்யப்படுவார்கள். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார்.

Readmore: Nigeria: 300 பள்ளி மாணவர்கள் கடத்தல்!… காப்பாற்ற முயன்ற ஒருவர் சுட்டுக்கொலை!… தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம்!… அச்சத்தில் பெற்றோர்கள்!

Advertisement