”மாநில அரசுகளின் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையற்றது”..!! தவெகவின் செயல்திட்ட அறிக்கை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
* சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும்.
* அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம்
* இரு மொழிக் கொள்கை - தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்.
* கட்சியில் 3இல் ஒரு பங்கு பதவிகள் மகளிருக்கு வழங்கப்படும்.
* மாநில அரசுகளின் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையற்றது
* ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.
* மதுரையில் தலைமைச் செயலகத்தின் கிளை அமைக்கப்படும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
* புற்றுநோய்க்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
* ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும்.
* பனை தொழில் மேம்படுத்தப்படும்.
* ஆவினில் கருப்பட்டி பால் வழங்கப்படும்.
* தமிழே ஆட்சி மொழி, வழிபாட்டில் தமிழ் உறுதி செய்யப்படும்.