யுபிஎஸ்சி டாப்பர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவின் போலி டெஸ்ட் பேப்பர் வைரல்!… நெட்டிசன்களிடையே சலசலப்பு!
UPSC 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவஸ்தாவின் போலி டெஸ்ட் பேப்பர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2023ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கான குரூப் ஏ, குரூப் பி தேர்வுகள் முன்னதாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி மத்திய (UPSC Civil Servies) அரசு பணிகள் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான நேர்காணல் அனைத்தும் ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் நடைபெற்றது.
ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்: இந்நிலையில், தற்போது தேர்வில் 1143 பேர் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடத்திலும், அனிமேஷ் பிரதான் இரண்டாவது இடத்திலும், அனன்யா ரெட்டி மூன்றாவது இடத்தையும் பெற்று அசத்தி இருக்கின்றனர். பொதுப்பிரிவில் தேர்வு எழுதியோரில் 474 பேரும், இடபிள்யு எஸ் பிரிவில் 115 பேரும், ஓபிசி பிரிவில் 303 பேரும், எஸ்சி பிரிவில் 165 பேரும், எஸ்டியில் 86 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவஸ்தாவின் போலி டெஸ்ட் பேப்பர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. X தளத்தில் @UPSC_Notes இல், “IAS டாப்பர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா CSE AIR-1 என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. அதில், மன்ஹாட்டன் திட்டம் பற்றிய ஓப்பன்ஹைமரின் யோசனையின் குறிப்புடன் தொடங்கும் கட்டுரை, தர்க்கத்திற்கும் உணர்ச்சிக்கும் இடையிலான சமநிலையைப் பற்றி விவாதிக்கிறது - "ஒரு மனம் அனைத்து தர்க்கமும் ஒரு கத்தி போன்றது, அதை பயன்படுத்தும் கையில் இரத்தம் வர வைக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த கட்டுரை ஆதித்ய ஸ்ரீவஸ்தவா எழுதியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
Readmore: இப்படி ஒரு வசதியா..? உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கான்னு தெரிஞ்சிக்கணுமா..?