முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

979 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு.. தகுதிகள் என்னென்ன..? விண்ணப்பிப்பது எப்படி?

UPSC has released the civil service exam notification for higher posts including IAS, IPS.
03:22 PM Jan 23, 2025 IST | Mari Thangam
Advertisement

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 23 உயர் பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் மே 25 ஆம் தேதியும், இதில் தகுதி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு : யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதை கடந்திருக்கக் கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

விண்ணப்பிப்பது எப்படி? யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு https://upsconline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் OTR Profile பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

Read more ; 2 மாதங்கள் தான் ஆச்சு..!! கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்ல ரெடியான மனைவி..!! கணவரின் விபரீத விளையாட்டால் பறிபோன உயிர்..!!

Tags :
civil service examiasIPSupsc
Advertisement
Next Article