யுபிஎஸ்சி தேர்வு..!! ஆள்மாறாட்டத்தை தடுக்க இனி ஆதார் கட்டாயம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
போலிச் சான்றிதழ் வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தன் மீது நடவடிக்கை எடுக்க யுபிஎஸ்சி-க்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளார். போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை மாற்றி தேர்வெழுதியதாக ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன்னை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்தும், முன்ஜாமீன் கோரியும் பூஜா கேத்கர் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பூஜா கேத்கரின் நடவடிக்கைகள் இருந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான், ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்க ஆதார் மூலம் தேர்வாளர் அடையாளத்தை உறுதி செய்ய மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்ச்சித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்பு, தேர்வாளருக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை காண்பித்து தேர்வு எழுத அனுப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Read More : அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்..!! செருப்பால அடிக்கணும்..!! கொந்தளித்த நடிகர் விஷால்..!!