For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அக்டோபரில் அடித்து தூக்கிய யுபிஐ பரிவர்த்தனைகள்..!! இதுவே முதல்முறை..!! ரூ.23.5 லட்சம் கோடியாம்..!!

Last October, an all-time high of ₹23.5 lakh crore was transacted through UPI.
02:34 PM Nov 02, 2024 IST | Chella
அக்டோபரில் அடித்து தூக்கிய யுபிஐ பரிவர்த்தனைகள்     இதுவே முதல்முறை     ரூ 23 5 லட்சம் கோடியாம்
Advertisement

UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ₹23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது ஏப்ரல் 2016இல் யுபிஐ செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து இதுவே முதல்முறை.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பகிர்ந்துள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதத்தில் 10 சதவீத அளவு மற்றும் மதிப்பில் 14 சதவீதம் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அக்டோபரில் தினசரி யுபிஐ பரிவர்த்தனைகள் 535 மில்லியனையும், மதிப்பில் ரூ.75,801 கோடியையும் தாண்டியுள்ளது. இதுவே செப்டம்பர் மாதத்தில் ரூ.68,800 கோடியாக இருந்தது.

அக்டோபரில் 467 மில்லியன் எனும் உடனடி பணம் செலுத்தும் சேவை பரிவர்த்தனைகள், செப்டம்பரில் 430 மில்லியனில் இருந்து 9% அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செப்டம்பரில் ரூ.5.65 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அக்டோபர் மாதம் 11 சதவீதம் அதிகரித்து ரூ.6.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, அக்டோபர் மாதத்தில், ஐ.எம்.பி.எஸ்., பாஸ்டேக் மற்றும் ஏ.இ.பி.எஸ்., எனும் ஆதார் பேமென்ட்ஸ் முறை வாயிலான பரிவர்த்தனைகளும் அதிகரித்தன.

Read More : சஷ்டி விரதம் கடைபிடிக்கும் வழிமுறைகள்..!! என்னென்ன சாப்பிடலாம்..? எப்படி விரதம் இருப்பது..?

Tags :
Advertisement