ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!
சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இனி ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும். கூகுள் பே, பேடிஎம், போன் பே, பாரத் பே என பல தனியார் நிறுவனங்களின் மொபைல் வாலெட் அப்ளிகேஷன்களில் யுபிஐ பேமெண்ட் என்ற பணப் பரிவர்த்தனை வழிமுறை இடம்பெற்றுள்ளது.
இந்த முறை உடனடியாக தொகையை செலுத்தவும் பெறவும் முடிகிறது. இதுவரை இந்த யுபிஐ பேமெண்ட் வசதியைப் பெற வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது டெபிட் கார்டு விவரங்களை நமது மொபைலில் உள்ள பேமெண்ட் அப்ளிகேஷன்களில் இணைக்க வேண்டும். அதன்பிறகு நமக்கான பிரத்யேக யுபிஐ ஐடி கிடைக்கும். அதன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்துவருகிறோம்.
இந்நிலையில், புதிதாக ரூபே க்ரெடிட் கார்டு மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம் BHMI UPI, Google Pay, Phone Pe, Paytm போன்ற பேமெண்ட் செயலி வைத்திருப்பவர்கள் அதில் கிரெடிட் கார்டு விவரங்களை இணைத்து அதன் மூலம் UPI பேமெண்ட்களைச் செய்யலாம். மற்ற யுபிஐ பரிவர்த்தனைகளைப் போலவே இதிலும் தினசரி வரம்பு உண்டு. அதன்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பிஎன்பி நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்ட கிரெடிட் கார்டு வழங்கும் பல வங்கிகள் இந்த யுபிஐ பேமெண்ட் வசதியையும் அனுமதிக்கின்றன. பரிவர்த்தனைகளின்போது கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியால் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
Read More : டிஎன்பிஎஸ்சி 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!! குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது..?