மாலத்தீவில் அறிமுகமாகிறது UPI வசதி!. அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!
UPI: மாலத்தீவில் இந்தியாவின் UPI வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவு நாட்டிற்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. சர்வதேச விவகாரங்களில் இந்தியா எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் மாலத்தீவு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதேபோல, மாலத்தீவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒரு மூத்த சகோதரனை போல இந்தியா முந்திக் கொண்டு செல்லும் அளவுக்கு இரு நாட்டின் உறவுகள் இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை அண்மையில் மாறியது.
கடந்த ஆண்டு அந்நாட்டின் அமைச்சர்கள் இந்தியா பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் வகையில் பேசினர். இது இந்திய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதன்காரணமாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை பலரும் தவிர்த்தனர். இது மாலத்தீவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.
இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தடைப்பட்டதால், அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவில் சிக்கியது. இதனை தொடர்ந்து மோடியும் இந்தியாவில் உள்ள லட்ச்சத்தீவிற்கு சென்றார். மேலும் இந்தியாவின் சுற்றுலாப் பகுதிக்கு வரும்படி இந்தியர்களுக்கும் அறிவுறுத்தினார். இதனால் லட்சத்தீவு பக்கம் மக்களின் கவனம் திரும்பியது. இதனை சுதாரித்துக்கொண்ட மாலத்தீவு இந்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியது. இந்திய பிரதமரை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
சீனாவுக்கு ஆதரவாக மாலத்தீவு அதிபர் செயல்பட்டு வந்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்பு படையினரை தங்கள் நாட்டில் இருந்து வெளியே உத்தரவிட்டும் இருந்தார். இந்த நிலையில் இந்தியாவை பகைத்தது தவறு என்பதை அறிந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு இருந்தார். இதையடுத்து கடந்த அக்டோபர் 7ம் தேதி 5 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை தந்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதேபோல் மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் UPI-ஐ அந்நாட்டில் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கி புதிய கூட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான TradeNet Maldives Corporation Limitedஐ கூட்டமைப்பின் முன்னணி நிறுவனமாக நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலத்தீவில் UPI நிறுவப்படுவதை மேற்பார்வையிட பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அமைச்சகத்தை வழிநடத்த நிதி அமைச்சகம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மாலத்தீவு நாணய ஆணையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கவும் முய்சு முடிவு செய்துள்ளார். செய்தார்.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில் அதிபர் முய்சு, இந்தியா வந்தபோது மாலத்தீவில் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த நமது அரசு உதவுவதாக உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவு அதிபரின் இந்த முடிவானது மாலத்தீவு பொருளாதாரத்திற்கு கணிசமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை…! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!