10,848 ரேஷன் கடைகளில் UPI வசதி..!! கூட்டுறவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரண உதவி ஆகியவையும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத்துறையில் தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரொக்கம் இல்லா பணப்பரிவர்த்தனை அதாவது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 10,848 ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Read More : வாட்ஸ் அப்பில் பிறந்த தேதி கட்டாயம்..!! இவர்கள் இனி பயன்படுத்த முடியாது..!! மெட்டா நிறுவனம் அதிரடி..!!