பணத்திற்காக மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி.... அதை VIDEO காலில் ரசித்த கணவன்…!
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பெண் ஒருவர், தனது கணவர் பணத்திற்காக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய நண்பர்களை அனுமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் புலந்த்ஷாஹரில் உள்ள குலாத்தியை சேர்ந்த ஒருவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் (13 மற்றும் 3 வயது) மற்றும் இரண்டு பெண்கள் (11 மற்றும் 7 வயது) என நான்கு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வேலை செய்கிறார் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வருவார்.
அந்த பெண் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் நண்பர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்தார். இதுகுறித்து என் கணவனின் சண்டையிட்டேன்.. அவர்கள் பணம் கொடுப்பார்கள்,, நீ அமைதிய இரு. அவர்கள் சொல்லுறது கேள் என கூறி கண்டித்தார். இல்லையெனில் விவாகரத்து செய்து விடுவதாகவும், பிள்ளைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். என் குழந்தைகளுக்காக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டேன்.
இப்போது அவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். நண்பர்களை பணம் வாங்கிவிட்டு அவர்களை வீட்டிற்கு வரவைத்து என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அதனை வீடியோ எடுத்து வெளி நாட்டில் இருக்கும் கணவருக்கு அனுப்பி, அவர் செல்போனில் பார்ப்பதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.