For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Social Media-வில் அரசுக்கு ஆதரவாக பதிவிட்டால் மாதம் ரூ.8 லட்சம்..!!

Up to 8 lakh per month incentive will be given to those who post on social media in support of the government. Government has announced.
03:49 PM Aug 28, 2024 IST | Mari Thangam
social media வில் அரசுக்கு ஆதரவாக பதிவிட்டால் மாதம் ரூ 8 லட்சம்
Advertisement

அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உ.பி. அரசு அறிவித்துள்ளது.

Advertisement

உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று (ஆக.,27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புதிய சமூக ஊடகங்கள் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி, பொது நலன், பயனுள்ள திட்டங்கள், சாதனைகள் மற்றும் மாநில மக்களுக்கு அதன் பலன்கள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் மீடியா தளங்கள் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பரப்புவதற்காக உத்தரபிரதேச அரசாங்கத்தால் உத்தரப் பிரதேச டிஜிட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

X (முன்னர் Twitter), Facebook, Instagram மற்றும் YouTube அடிப்படையில் 04 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்  Twitter, Facebook, Instagram ஆகியவற்றின் கணக்கு வைத்திருப்பவர்கள், அரசுக்கு ஆதரவான வீடியோக்கள், ரீல்ஸ்கள், அரசு திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தினால், மாதம் ரூ.5.லட்சம், ரூ.4. லட்சம், ரூ.3. லட்சம் மற்றும் ரூ.2. லட்சம் என வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

YouTube இல் அரசுக்கு ஆதரவான வீடியோ, குறும்படங்கள் பதிவிடுபவர்களுக்கு ரூ.8.00 லட்சம், 7.00 லட்சம், 6.00 லட்சம் மற்றும் 4.00 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். எந்த சூழ்நிலையிலும் உள்ளடக்கம் அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ அல்லது தேச விரோதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

அதே நேரம், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை போடும் பயனர்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின்கீழ் தனியுரிமை மீறல்கள் மற்றும் இணைய பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின்படி வழக்கு தொடரப்படும். இனி, தேச விரோத பதிவுகளை இடுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும் வழங்கப்படும். அதேபோல், ஆபாசமான அல்லது அவதூறான விஷயங்களை ஆன்லைனில் பரப்புபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்.

Read more ; உஷார்!. தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமையா?. ரூ.500 கேட்டு மோசடி!. வைரலாகும் பதிவுகள்!

Tags :
Advertisement