"ராமர் கோவிலை தகர்ப்போம்..."! வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.! இருவர் கைது.! அதிரடிப்படை தீவிர நடவடிக்கை.!
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்க இருக்கிறது. இன்னிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் ஒடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக இந்தியாவே தயாராகி வரும் நிலையில் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை வெடிகுண்டு வீசி கொலை செய்ய போவதாகவும் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு மிரட்டல் ஒடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான ஈமெயில் ஆலம் அன்சாரி மற்றும் ஜுபைர் கான் ஆகிய பெயர்களிலிருந்து வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் அதிரடிப்படை இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியது. அவர்களது விசாரணையைத் தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலம் கோமதி நகர் பகுதியைச் சேர்ந்த தகர சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ரா ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பாரா மெடிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் எனவும் காவல்துறை விசாரணையில் வெளியாகி இருக்கிறது.
இவர்கள் எதற்காக இஸ்லாமியர்களின் பெயரில் காவல்துறைக்கு இமெயில் அனுப்பினார்கள் என தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழா நேரத்தில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக இது போன்ற இமெயில் அனுப்பப்பட்டதா எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.