கிரெடிட் கார்டை யூஸ் பண்ணாம வைத்திருக்கிறீர்களா?… கட்டணம் விதிக்கப்படும்!… தள்ளுபடிகளும் கிடைக்காது!
மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் மற்றும் வாடகை போன்றவற்றை செலுத்தலாம் என்பதால் அதிகம் பேர் தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளும் இப்போது போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுத்து வருகின்றன. டெபிட் கார்டை காட்டிலும் இப்போது கிரெடிட் கார்டு வாயிலாக அதிகளவில் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கிரெடிட் கார்டுகள் பயன்பாடு இன்று பரவலாகிவிட்ட நிலையில், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் அவை பெரிய இழப்பை ஏற்படுத்திவிடலாம் என்பதால், விதிமுறைகளை சரியாக தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு சிலர் பெரும்பாலும் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும்.
உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்து அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும். கிரெடிட் கார்டுகள் செயல்படாமல் இருந்தால் அதற்கு சில கட்டணங்களை விதிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கட்டணம் விதிக்கப்படலாம். கிரெடிட் கார்டு வழங்கப்படும் போது அதில் சேவை கட்டணம் இருக்கும். இதனுடன், ஆண்டு கட்டணமும் விதிக்கப்படுகிறது.
அதோடு, மக்கள் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அவர்களின் கிரெடிட் கார்டில் வருடாந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று கிரெடிட் கார்டில் ஒரு வரம்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வருடாந்திர கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டில் ஏதேனும் ரிவார்டு பெற்றிருந்தாலோ அல்லது ஏதேனும் சலுகையின் கீழ் நீங்கள் தள்ளுபடியைப் பெற்றிருந்து, நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை என்றால் இந்த வெகுமதிகள் மற்றும் தள்ளுபடிகளின் பலன்களை உங்களால் பெற முடியாது.