முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கட்டுக்கடங்காத கலவரவம்!. மணிப்பூர் விரையும் 5,000 துணை ராணுவ வீரர்கள்!. அமித் ஷா அதிரடி!

Unruly riot! 5,000 paramilitary soldiers rushed to Manipur! Amit Shah action!
05:50 AM Nov 19, 2024 IST | Kokila
Advertisement

Manipur violence: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதலாக 5000 துணை ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை செயலர் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக்குநர் தபன்டிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு கூடுதல் படையினரை அனுப்பவும், அங்கு விரைவில் முழு அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்துமாறும் அமித் ஷா அறிவுறுத்தினார். மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர் கள்அடங்கியதுணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) இருந்து 35 யூனிட், எல்லை பாதுகாப்பு படை படையில் (பிஎஸ்எப்) இருந்து 15 யூனிட் என மொத்தம் 50 கம் பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் மணிப்பூர் செல்கின்றனர்.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். "அவரை சுட்டது யார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாதுகாப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது" என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Readmore: உடலுறவின்போது ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுவது ஏன் தெரியுமா..? அதுவும் இந்த வயது பெண்களுக்கு ரொம்ப இருக்குமாம்..!!

Tags :
5000 paramilitary soldiersAmit Shah actionManipur violence
Advertisement
Next Article