முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குறையாத போர் பதற்றம்!. பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா!.

India dispatches aid to conflict-hit Palestine: 30 tons of medicine, food items
12:09 PM Oct 22, 2024 IST | Kokila
Advertisement

Palestine: இஸ்ரேல் - ஹமாஸ் போர் பதற்றத்திற்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்காக 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

Advertisement

கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் கொல்லப்பட்டார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

போரில் பாதிக்கப்படும் லெபனானுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 11 டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பியது. இந்நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது.

30 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய முதல் தவணை உதவி இன்று புறப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், பல்பொருட்கள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Readmore: கர்ப்பிணிகளே!. மார்பகத்தை பாதுகாக்க இந்த வழிமுறையை கடைபிடியுங்கள்!

Tags :
30 tons of medicineconflict-hit PalestinIndia dispatches
Advertisement
Next Article