For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gold Rate | வரலாறு காணாத உயர்வு..!! ரூ.52,000-ஐ தொட்டது தங்கம் விலை..!! வேதனையில் சாமானிய மக்கள்..!!

11:34 AM Apr 03, 2024 IST | Chella
gold rate   வரலாறு காணாத உயர்வு     ரூ 52 000 ஐ தொட்டது தங்கம் விலை     வேதனையில் சாமானிய மக்கள்
Advertisement

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

Advertisement

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில், உயர்ந்துக்கொண்டே செல்கிறது.

சமீபத்தில் ரூ.50,000 கடந்த சவரன் விலை, அடுத்த சில நாட்களில் ரூ.51,000 கடந்தது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், இன்று (ஏப்.,3) வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.84க்கு விற்பனையாகிறது.

Read More : பிஎஃப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! இனி அந்த டென்ஷன் வேண்டாம்..!!

Advertisement