For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது..!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

02:55 PM May 04, 2024 IST | Chella
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது     உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகாரில் தங்கள் திருமணத்திற்கு பிறகு தன்னிடம் பலமுறை இயற்கைக்கு மாறான முறையில் கணவர் உறவு கொண்டார். கணவரது இந்த செயலுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அந்த பெண்ணின் கணவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் வழக்க்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது எனக் கூறி கணவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில், ஐபிசியின் 375வது பிரிவின் கீழ் 'பலாத்காரம் ' என்பதன் திருத்தப்பட்ட சட்டத்தின்படி மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது என்பது பலாத்காரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில், 15-வயதுக்கு கீழ் இல்லாத மனைவியுடன் எந்த வகையிலான பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது பலாத்காரம் கிடையாது.

ஆனால், இங்குள்ள சூழல் அடிப்படையில் மனைவியின் சம்மதம் இன்றி, இயற்கைக்கு மாறான உறவு கொண்டிருப்பது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. திருமண பலாத்காரம் என்பது இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியுடன் இயற்கை மாறான உறவு கொள்வது ஐபிசி 377-கீழ் குற்றம் ஆகாது. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வாழும்போது, பாலியல் உறவு வைத்துக்கொண்டால் இது பலாத்காரம் ஆக சட்டப்பிரிவு 376 பி -யின் கீழ் கருத முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More : இதில் முதலீடு செய்தால் பெரியளவில் வருமானம் பார்க்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement